பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை சார்பில், மாவட்ட தலைவர் நாகூர் கனி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனங்களை சைக்கிளில் ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான கலால் வரியை ரத்து செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர்.