மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு நினைவுநாள்
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அவரது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்தனர்;
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே என்று பல்வேறு தத்துவ பாடல்களை எழுதிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 62ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அவரது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து பட்டுக்கோட்டையார் புகழ் வாழ்க என வாழ்த்து முழக்கமிட்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.