பட்டுக்கோட்டை: பலத்த சூறைக்காற்று- மரங்கள் வேறோடு சாய்ந்தன!

பட்டுக்கோட்டை கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்து சேதம் ஏற்படுத்தின.

Update: 2021-05-25 14:30 GMT

பட்டுக்கோட்டையில் சூறைக்காற்று வீசியதை காணலாம்.

தஞ்சாவூர் மாவட்ட கடலோர பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

காற்றின் வேகம் அதிகரித்தால் இதனால் பெரும்பான்மையான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளின் விளம்பர போர்டுகள் சரிந்து சாலைகளில் விழுந்தன.

இது தவிர கடல் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் காணப்பட்டதால் அலைகள் அதிக அளவு உயரத்தில் எழுந்து படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏராளமான படகுகள் சேதமடைந்தன.

Tags:    

Similar News