பட்டுக்கோட்டை கடற்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பட்டுக்கோட்டை கடற்பகுதி மீனவர்கள் தொடர் மழை காரணமாக கடலுக்குள் செல்லவில்லை;
பட்டுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு மிக தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை அடுத்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடற்கரைப் பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக துறைமுக வாய்க்காலில் கட்டி வைத்துள்ளனர். மீன்வளத்துறை மூலம் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல போவதில்லை என்றும் இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.