அதிராம்பட்டினத்தில் பெயிண்டர் கொலை: கொலையாளியைப்பிடிக்க போலீஸார் தீவிரம்
அதிராம்பட்டினம், வண்டிப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சுரேஷை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர்;
அதிராம்பட்டினத்தில் பெயிண்டர் வெட்டிப்படுகொலை. தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்( 30 ). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அதிராம்பட்டினம், வண்டிப்பேட்டை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சுரேஷை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த, பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணன் மற்றும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பெயிண்டர் சுரேஷின் உடலை கைப்பற்றி , அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய கடைவீதியான வண்டிப்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.