பட்டுக்கோட்டையில் ஓ.டி.பி. இல்லாமலேயே கிரிடிட் கார்டிலிருந்து ரூ.75,000 சுருட்டல்

பட்டுக்கோட்டையில் ஓ.டி.பி. இல்லாமலேயே கிரிடிட் கார்டிலிருந்து ரூ.75,000 எடுத்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-11 08:15 GMT

பைல் படம்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவரின் வங்கி கிரெடிட் கார்ட்டில் இருந்து ரூ.75 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் வாயிலாக எடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வினோத் பிரகாஷ் (42). சுயதொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வினோத் பிரகாஷ் செல்போனுக்கு அவரது கிரடிட் கார்டு சம்பந்தமாக ஓ.டி.பி. வந்துள்ளது.

சிறிது நேரத்தில் அந்த கார்டிலிருந்து ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதை அவர் பார்க்கவில்லை. தொடர்ந்து இருமுறை ஓ.டி.பி. வந்துள்ளது. தொடர்ந்து அவர் கிரெடிட் கார்டு வைத்துள்ள வங்கி கஸ்டமர் கேரில் இருந்து வினோத்தை தொடர்பு கொண்டு உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.75 ஆயிரம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஓ.டி.பி. நம்பரை தான் யாருக்கும் தெரிவிக்காத நிலையில் எப்படி இந்த மோசடி நடந்தது என்று தெரியாமல் வினோத் பிரகாஸ் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News