ஆறு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு: நரபலியா என காவல்துறை விசாரணை?

மீன் வைக்கும் பெட்டகத்தில் 6 மாத பெண் குழந்தை மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.;

Update: 2021-12-18 05:30 GMT

பைல் படம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன். இவரது 6மாத பெண் குழந்தை ஹஜிரா. இந்நிலையில் 6 மாத பெண் குழந்தை ஹஜிரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் பிளாஸ்டிக் தொட்டியில் நீரில் மூழ்கி சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து பேசி மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் அடக்கம் செய்து விட்டனர். இது குறித்து அப்பகுதி தலையாரி சுதாகர் மூலம் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்கு தெரியவந்தது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 6 மாத பெண் குழந்தை நீர்நிறைந்த மீன் தொட்டியில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது எப்படி, மேலும் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News