கடந்த 24 மணி நேரத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் வெறி நாய் தடுப்பூசி போட குவிந்தனர்
நாய்கடிதடுப்பூசி அரசுமருத்துவமனையில் தட்டுப்பாடு இல்லைஎன்றாலும் நாய்களின அட்டகாசம் குறையவில்லை என்று வேதனை தெரிவித்தனர்;
கடந்த 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் வெறி நாய்கடிக்காக தடுப்பூசி போட மருத்துவமனையில் குவிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகராட்சி பகுதிகளிலும் அதிக அளவில் நாய்கள் உள்ளன. இவை சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடித்துவிடுவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக சாலைகளில் செல்பவர்களை துரத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்ககூடிய குழந்தைகளையும் நாய்கள் துரத்துவதால் குழந்தைகள் அச்சத்தில் ஓடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளையும் நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது நாய்கள் குறுக்கே வருவதால் ஏராளமானோர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
நாய்கள் வெறிப்பிடித்து திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்ததால், ரத்தக் காயங்களுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு சிகிச்சையில் உள்ளனர்.
நாய்கடி ஊசி அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தாலும் நாய்களின அட்டகாசம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதுடன். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றித் திரியும் வெறி நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வெறி நாய் கடித்ததன் காரணமாக அதிக அளவு பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.