ஒட்டங்காடு முத்து மாரியம்மன் கோயில் விழா: பெண்கள் பூத்தட்டுடன் ஊர்வலம்

பட்டுக்கோட்டை அருகே, ஒட்டங்காடு முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில், 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டு எடுத்து வந்தனர்.;

Update: 2022-04-26 00:15 GMT

விழாவில், பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்த பெண்கள். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா, காப்பு கட்டப்பட்டு, நேற்று  கோலாகலமாக துவங்கியது. இதனைத் தொடர்ந்து இரவு வாணவேடிக்கைகள் இரவை பகலாக்கும் வகையில் வெளிச்சம் நிறைந்து காணப்பட்டது.

விழாவில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். காப்புக் கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு விஷேச பூஜைகள், தீபாராதனை மற்றும் தினந்தோறும் இரவு கலை நிகழ்ச்சிகள் என திருவிழா நடைபெறும். திரு விழாவையொட்டி இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

Tags:    

Similar News