மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 90 -ஆவது பிறந்த நாள்: சைக்கிள் பேரணி
மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்;
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு டாக்டர் சதாசிவம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வழியாக சென்ற பேரணி தனியார் மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அப்துல்கலாமின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் உள்ளிட்ட சமூக நல அமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.