கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் தரிசனம்
கரம்பயம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா. மூன்று தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.;
கரம்பயம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா. ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தேர்கள் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 10ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு அதனைத் தொடர்ந்து திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. சரியாக மாலை 4 மணிக்கு மூன்று தேர்கள் அலங்கரிக்கப்பட்டுமுதலாவது தேரில்அய்யனாரும், நடுத்தேரில் முருகனும், கடைசி பெரிய தேரில் முத்துமாரியம்மனும் இருந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை வழிபட்டு சென்றனர். முன்னதாக தேரோட்டத்தையொட்டி விழா கமிட்டியினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.