பட்டுக்கோட்டையில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

Update: 2022-01-02 05:00 GMT

பட்டுக்கோட்டையில் நேற்று பெய்த கன மழையில் அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த ஒரே நாள் மழையில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பணிகள் பாதிப்பு.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் கனமழை தொடர்ந்து பெய்ததால், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில், நைனாங்குளம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதேபோல மழவேனிற்காடு கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அத்தோடு அதிராம்பட்டினம் பகுதியில் பெய்த கன மழையினால் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடற்கரை காவல் நிலையம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் ஆகியவற்றை மழைநீர் சூழ்ந்தது. சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்குள் மழைநீர் உட்புகுந்த தால் காவல் நிலையப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.. இதேபோல அதிராம்பட்டினம் பகுதியில் பிலால் நகர்,ஹாஜா நகர், முத்தம்மாள் தெரு, பழஞ்செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மறவக்காடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளது இதனால் அறுவடை தருவாயில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

Tags:    

Similar News