பட்டுக்கோட்டையில் காற்றுடன் கூடிய கனமழை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.;
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று மதியம் முதல் மேகம் திரண்டு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து திடீரென பலத்த காற்று வீசியது.
பின்பு இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து அரை மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.