பட்டுக்கோட்டையில் காடு வளர்ப்புத் திட்டம்: சார் ஆட்சியர் தொடங்கி வைப்பு
கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக மாவட்டம் முழுவதும் கடந்த நூறு நாள்களாக மரக்கன்றுகள் நடப்படுகிறது;
பட்டுக்கோட்டையில் காடுகள் வளப்புத்திட்டத்தை தொடக்கி வைத்த சார் ஆட்சியர் பாலச்சந்தர்
காடு வளர்ப்புத் திட்டத்தை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ரோட்டரி சங்க தன்னார்வ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த நூறு நாட்களாக பல்வேறு பகுதிகளில் காடு வளர்ப்புதிட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், இயற்கை வளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இன்று சார் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் சார் ஆட்சியர் பாலச்சந்தர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.