மாவட்ட ஆட்சியர்- பட்டுக்கோட்டை எம்எல்ஏ-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
நொச்சிகுளம் கிராம மக்கள், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் கார்களை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில்,, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. மதுக்கூர் அருகே வடக்கு ஊராட்சியை சேர்ந்த நொச்சிகுளம் கிராமத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடந்த 3 நாட்களாக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் அந்த வழியாக கண்ணனாறு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நொச்சிகுளம் கிராம மக்கள், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் கார்களை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டு பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துச்சென்றார்.