குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

நகராட்சி நிர்வாகத்தினர் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தாததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-12 01:45 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காசாங்குளம் சிவன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், விநாயகர் கோயில் என அனைத்து கோயில்களுக்கும் வரும் பக்தர்கள் இந்த குளத்தில் நீராடிவிட்டும், கை கால் சுத்தம் செய்துவிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம் .அந்த வகையில் புனிதமான இந்த குளம் சில தினங்களாக மிகவும் அசுத்தம் அடைந்து துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அந்த குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் திடீரென செத்து மிதந்தன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது.

இப்பகுதியில் செல்வோர் அனைவரும் குளத்துக்கு அருகில் வரும்போது முகம் சுளித்து செல்கின்றனர். மீன்கள் இறந்து மிதக்கும் நிலையில் இந்த மீன்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புனிதமான இந்த காசாங்குளம் இப்படி அசுத்தம் அடைந்து விட்டதே என ஆன்மீக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News