தஞ்சையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு.

பாதிப்புகள் தொடர்பான புகைப்பட தொகுப்பை முதலமைச்சரிடம் காண்பித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கினார்;

Update: 2021-11-13 15:30 GMT

பெரியகோட்டை  நீரில் மூழ்கியுள்ள விளை நிலங்களை  முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

மழையால் பாதிப்படைந்த  நெல் வயல்களை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் குறித்த அமைச்சர்கள் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது ,

இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரியகோட்டை வருவாய் கிராமத்தில் 285 ஹெக்டர் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது ,இதில் 140 ஹெக்டர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, இதனை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக முதலமைச்சரிடம் அளித்தனர். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த வடகிழக்கு பருவ மழையால் பாதிப்புகள் தொடர்பான புகைப்பட காட்சி தொகுப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முதலமைச்சரிடம் காண்பித்து,  விளக்கிக் கூறினார். ஆய்வின்போது மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், வேளாண் துறையினர், வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News