பட்டுக்கோட்டை சிறுவன் ஸ்கேட்டிங்கில் சாதனை.

Update: 2021-09-04 05:15 GMT

ஏழு வயது சிறுவன் ஸ்கேட்டிங் செல்லும் காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாய் நிகில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த நளன்ராஜன் என்ற ஏழு வயது சிறுவன்  ஒரு மணி நேரத்தில் 18 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் சென்று சாதனை புரிந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில்  இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக அணைக்காடு கிராமத்தில் துவங்கிய இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் பாலச்சந்தர் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பைபாஸ் சாலை வழியாக நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் அணைக்காடு கிராமத்திற்கு வந்து முடிவில் கவிஞர் கல்யாணசுந்தரம் மணி மண்டபத்தில் நிறைவடைந்தது. ஒரு மணிநேரத்தில் 18 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் பயணம்செய்து சாதனை படைத்த இச்சிறுவனுக்கு  நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  சான்றிதழும்  வழங்கப்பட்டது.

Tags:    

Similar News