கோட்டாட்சியரைக் கண்டித்து மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதப் போராட்டம்
தனக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சப் டிவிஷன் செய்து தர கோட்டாட்சியர் மறுப்பதாகக்கூறி மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதம்;
தனக்கு சொந்தமான நிலத்தை தனக்கு சப் டிவிஷன் செய்துதர மறுப்பதாக புகார் கூறி , கோட்டாட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளி பெண் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள புனல்வாசல் கோயில் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜோன் ஆப் ஆர்க்( 40.). இவர் தனது கணவர் அந்தோணி ராஜ் என்பவரை 7 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்ட நிலையில், தாய் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை தனக்கு எழுதிக் கொடுத்த நிலத்தை தனக்கு சப் டிவிசன் செய்துதர கோட்டாட்சியர் மறுப்பதாக, பட்டுக்கோட்டை கோட்டாட்சியரை கண்டித்து இன்று காலை முதல் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.