சொத்து பிரச்சனையில் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது

தஞ்சை அருகே இடப் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தம்பியை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட நான்கு பேரை 4 பேரை போலீசார் கைது செய்து, தப்பி ஓடிய அண்ணனை தேடி வருகின்றனர்.;

Update: 2021-05-08 16:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வெள்ளை தேவன் விடுதியை சேர்ந்தவர் பெருமாள் 55. இவருக்கும் இவரது அண்ணன் சுப்பையன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பெருமாள் நேற்று முன்தினம் ஊரணிபுரத்தில், பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாள், இரும்பு கம்பி, உருட்டுக் கட்டைகளால், சரமாரியாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கிருந்து தப்பி சென்ற பெருமாள் திருவோணம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், பெருமாளை அவரது அண்ணன் சுப்பையன், அவரது மகன் அர்க்மேடிஸ், 28, ஆகியோருக்கு இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இதன் அடிப்படையில், அர்க்மேடிசிடம், போலீசார் நடத்திய விசாரணையில், அர்க்மேடிஸ் தனது நண்பர்களான ராங்கிபட்டையை சேர்ந்த மணிகண்டன்,, வேம்புஅரசன்,,கறம்பக்குடி அஜய் , ஆகியோர் பெருமாளை கொலை செய்யும் முயற்சியில், அவரை தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து அர்க்மேடிஸ், மணிகண்டன், அஜய், வேம்பு அரசன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுப்பையன் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News