அதிராம்பட்டினத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 1008 குத்து விளக்கு பூஜை
அதிராம்பட்டினத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பெண்கள் 1008 குத்து விளக்கு பூஜை நடத்தினர்.;
அதிராம்பட்டினத்தில் 1008 பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மிகவும் பழமையான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ துர்கா செல்லியம்மன் கோயிலில் இன்று சித்திரை 1 தமிழ் புத்தாண்டையொட்டி குத்து விளக்கு பூஜை அதி விமரிசையாக நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு துவங்கிய இந்த பூஜை இரண்டு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று 8 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த பூஜையில்1008 பெண்கள் கலந்து கொண்டு 1008 விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.