கடல் நீர் உள்வாங்கியது

Update: 2021-05-26 04:30 GMT

நேற்று வீசிய சூறைக்காற்றால் பல்வேறு பகுதிகளில் விழுந்துள்ள மரங்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர், மேலும் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. சுமார் ஒரு மணி நேரம் வீசிய காற்றால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. தற்போது விழுந்த மரங்களை பொதுமக்களும், பொதுப்பணித்துறையினரும் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கிய இருப்பதால், மீன் பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு தங்களுடைய நாட்டு படகுகளை தள்ளிக் கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மேலும் நேற்று வீசிய பலத்த காற்றால் நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News