குழந்தைகளுக்காக உதவி கேட்கும் தாய்: மருத்துவமனையில் பரிதாபம்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணவனால் கைவிடப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண்மணி ஒருவர் தனது மூன்று குழந்தைகளுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-02-21 14:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. வீராச்சாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனால் உஷா 3 குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் உஷாவிற்கு கடந்த ஒரு மாதமாகவே உடல் எடை மிகக்குறைந்து படுத்த படுக்கையாகி விட்டார். உடனே இதையறிந்த சில சமூக ஆர்வலர்கள் உஷாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உஷாவின் நிலமையை அறிந்த பட்டுக்கோட்டை தலைமை மருத்துவர் அன்பழகன் நேரடியாக சென்று அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.


உஷாவின் மூன்று பிள்ளைகளும் எந்தவொரு ஆதரவும் இல்லாமலும் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூட தெரியாமல் மருத்துவமனையில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த குழந்தைகளைப் பார்த்து மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் பரிதாபமாக பார்த்து செல்கின்றனர்.

தான் கணவனால் கைவிடப்பட்டு 3 குழந்தைகளோடு அனாதையாக இருக்கும் நிலையில் தனது 3 குழந்தைகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவி செய்யவேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News