எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்-அமைச்சராக சிறப்பு பூஜை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள பெரமையா கோவிலில், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது.;

Update: 2021-02-20 05:00 GMT

வரும் ஏப்ரல் கடைசி வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கூர் வடக்கில் உள்ள, பெரமையா சன்னதியில் எடப்பாடி மீண்டும் முதலமைச்சராக வேண்டி அதிமுக வினர் அபிஷேக ஆராதனை செய்தனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தலைமையில் மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் என்.தண்டாயுதபாணி மற்றும் மதுக்கூர் ஒன்றிய துணைச் செயலாளர் அத்தி. மா.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து எம்எல்ஏ சி.வி.சேகர் மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி மற்றும் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News