தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் கிராமம் மோகூர் பகுதியில் உள்ள கண்ணன் ஆற்றிலிருந்து டிராக்டர் மற்றும் மினி லாரியில் மூட்டைகளில் கட்டி மணல் அள்ளி வந்த நிலையில் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
மதுரை உயர் நீதிமன்றம் ஆறுகளில் மணல் அள்ள தடை விதித்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டு குவாரிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் ஆங்காங்கே திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
பட்டுக்கோட்டையில் உள்ள காடுகளில் லாரிகள் மற்றும் மணல் வண்டிகள் மூலமாக திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதால் தொடர்ந்து புகார் வந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மோகூர் ஊராட்சியில் கண்ணன் ஆற்றில் இருந்து டிராக்டர் மற்றும் மினி லாரியில் மூட்டைகளில் மணல் ஏற்றி வந்த வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தி மணல் வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.