தஞ்சை அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

தஞ்சை அருகே ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.

Update: 2021-09-25 13:30 GMT

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே செண்பகபுரத்தை சேர்ந்த ரூபிகா (14), கௌசிகா (13) இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள விளைநிலங்களில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஏரியில் கால் கழுவ ஏரியில் இறங்கிய ரூபிகா, நீரில் மூழ்குவதை கண்டு அவரை காப்பற்றுவதற்காக மற்றொரு சிறுமியான கௌசிகாவும் ஏரியில் இறங்கியுள்ளார்.

அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து நீண்ட நேரம் சிறுமிகள் காணததால், உறவினர்கள் தேடிய போது இரண்டு சிறுமிகள் ஏரியில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அம்மாப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிர் இருந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News