புதுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் உலக பூமி நாள் விழா

இலுப்பூர் கல்வி மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக பூமி தினவிழா கொண்டாடப்பட்டது;

Update: 2022-04-22 20:30 GMT

 இலுப்பூர் கல்வி மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக பூமி தினவிழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 22/04/2022 உலக பூமி தினவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார். புதுக்கோட்டை, மரம் நண்பர்களின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின் கலந்து உலக பூமிநாள் பற்றி சிறப்புரையாற்றி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.

மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்ட பூமி தின உறுதி மொழியிலும் பங்கேற்று சிறப்பு செய்துள்ளார். இன்று நடப்பட்ட 22 மரக்கன்றுகளும் மரம் நண்பர்களால் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ப.வள்ளுவன் அவர் தலைமையில் விழா நடைபெற்றது. தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.ரெங்கராஜ் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News