கீரனூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையம்: அமைச்சர் ரகுபதி திறப்பு

இவ்விழாவில் ரூ.3.22 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்;

Update: 2023-05-12 09:30 GMT

குன்றாண்டார்கோவில் வட்டாரம், கீரனூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை சட்ட அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

குன்றாண்டார்கோவில் வட்டாரம், கீரனூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை சட்ட அமைச்சர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரம், கீரனூரில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு)  பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.38  லட்சம் மதிப்பிலான துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  இன்று (12.05.2023) திறந்து வைத்தார்.

இவ்விழாவில் 13 பயனாளிகளுக்கு ரூ.3.22 இலட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்களை வழங்கி  அமைச்சர் ரகுபதி பேசியதாவது: விவசாயிகளின் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையில் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் தோழனாக தமிழ்நாடு அரசு விளங்கி வருகிறது.

இவ்விழாவில் ரூ.3.22 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இவ்விழாவில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் கே.ஆர்.என்.போஸ், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை)  செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (பொ)  மதியழகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News