வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2023-06-03 15:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன் வைத்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலையில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும். குடிமனைப் பட்டா இல்லாத அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.

மலம்பட்டி, ஆம்பூர்பட்டி கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஏழை மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். விராலிமலையில் பழுதடைந்துள்ள நூலக கட்டிடத்திற்குப் பதிலாக புதிய கட்டடிடம் கட்டித்தர வேண்டும். பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலை சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆனந்த், ஏ.இருதயம், ஏ.சிவக்குமார், ராஜா உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்த்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News