மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடியில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்;

Update: 2023-05-11 03:30 GMT

இலுப்பூர் அருகே திருநல்லூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்குகிறார், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

இலுப்பூர் வட்டம்,திருநல்லூரில் நடைபெற்றமக்கள் தொடர்பு முகாமில்1,036 பயனாளிகளுக்கு ரூ.2.38கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார்.

புதுக்கோட்டைமாவட்டம் இலுப்பூர் வட்டம்,திருநல்லூர் கிராமத்தில், மக்கள் தொடர்புமுகாம், மாவட்டஆட்சியர் கவிதாராமு தலைமையில் நேற்று  நடைபெற்றது.

தமிழகஅரசுபல்வேறுஅரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம்பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இம்முகாமில், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கால்நடைபராமரிப்புத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை,வனத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சிஅரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரகவளர்ச்சித் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில்,1,036 பயனாளிகளுக்கு ரூ.2,37,96,983 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டஉதவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொது மக்களுக்கு அரசின் நலத்திட்டஉதவிகள் சென்றடையும் வகையில்,கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்குஅறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி திருநல்லூர்கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்புமுகாமில்1,036பயனாளிகளுக்குரூ.2.38கோடிமதிப்பீட்டில் பல்வேறுநலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகஅரசின் சார்பில் பல்வேறுதுறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழகஅரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அறிந்துகொண்டு பயன் பெறவேண்டும்.

மக்கள் தொடர்புமுகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட தகவல்களைபொதுமக்கள் அனைவரும் தங்களது அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும் தெரிவித்து தகுதியான பொதுமக்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிஅரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு நல்வாழ்விற்குரிய தகவல்களைஅறிந்து கொண்டு நலவாழ்வு வாழவேண்டும்.மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்க ளை தெரிந்து கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

இதில், மாவட்டவருவாய் அலுவலர் .மா.செல்வி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி,வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்டமாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் எஸ்.உலகநாதன்,தென்னலூர் பழநியப்பன், திருநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவர் மணிமுத்து, உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அரசுஅலுவலர்கள்மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News