குறுவளமைய அளவில் கட்டுரைப்போட்டி முதன்மைக் கல்வி அலுவலர் பரிசு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றத்தின் சார்பில் குறுவளமைய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது..
இந்தாண்டு 2020-2021 ஆம் கல்வியாண்டில் இம்மன்றங்களின் மூலம் குறுவளமைய அளவிலான கட்டுரைப் போட்டிகளை நடத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆணையிட்டிருந்தார்.
அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு எனது கனவுப் பள்ளி,எனது பள்ளி நூலகம் என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது.உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பு வழங்கப் பட்டிருந்தது..
மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே இப்போட்டியில் கலந்து கொண்டனர்.தங்களுடைய படைப்புகளை வெள்ளைத் தாள்களில் எழுதி அவற்றினை பெற்றோர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.
அதனை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறுவளமையங்களில் ஒப்படைத்தனர்.பின்னர் நடுவர்கள் குறுவளமைய அளவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் மூன்று படைப்பினையும், 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் மூன்று சிறந்த படைப்புகளையும் தேர்ந்து எடுத்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இணையதள கல்வியினை கருத்தில் கொண்டு முதல்பரிசாக ரூ .7 ஆயிரம் மதிப்பில் டேப்லெட்டும். ,இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம் மதிப்பில் பல்திறன் கைபேசியும். ,மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரம் மதிப்பிலான அறிவியல் சார் கால்குலேட்டர் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பாராட்டினார்..