பொன்னமராவதியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு கையெழுத்து பெற வேண்டும் என்றால் 34 படிகள் ஏறி இறங்க வேண்டும்

Update: 2022-03-09 09:26 GMT

பொன்னமராவதியில் பயனற்று கிடைக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை.

பொன்னமராவதியில் பயனற்று கிடைக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் மேல வட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் கொண்டு வர மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. பின்பு புதிதாக திறக்கப்பட்ட கட்டத்தில் செயல் படாமல் பழைய இடத்திலே செயல்பட்டு வருவதால், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கையொப்பம் பெற வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மாடி படி ஏற முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் செந்தில், மூர்த்தி  ஆகியோர் பேசுகையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு என்னதான் முன்னுரிமை வழங்கினாலும் எங்களுக்கான உதவிகளை பெற சில அதிகாரிகள் எங்களை அலையைவிடும் செயல்களை யாரிடம் சொல்லி அளுவது என்று தெரியவில்லை.பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு கையெழுத்து பெற வேண்டும் என்று வந்தால் 17+17என மொத்தம் 34 படிகள் ஏறி இறங்க வேண்டி அவலநிலை இருப்பதாகவும் மாற்றுத்திறனாளி ஆகிய எங்களால் எப்படி இத்தனை படி ஏறி இறங்க முடியும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு கையெழுத்து பெற வேண்டும் என்று வந்தால் 17+17என மொத்தம் 34 படிகள் ஏறி இறங்க வேண்டி நிலை உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஊக்குவித்து வரும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலையிட்டு,  பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அல்லது மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழ் பகுதியில் வாரத்தில் ஒருநாள் வெள்ளி,செவ்வாய் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று முகாம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News