புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல்;

Update: 2022-07-20 13:30 GMT

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்

பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம் மறு சீரமைத்து இயங்க வைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்திலுள்ள புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்ததால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இப்புறக்காவல் நிலையம் சில மாதங்களாகவே பூட்டியே கிடைப்பதால் வெளியூரிலிருந்து பொன்னமராவதிக்கு வரும் பொது மக்கள் எந்த ஒரு தகவல்களும் தெரிந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.

மேலும் இப்புறக்காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உள்ளதால் தினசரி ஒரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வேண்டும் என்றும். அதேவேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலருக்கு தேவையான புறக்காவல் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு தண்ணீர் வசதி கிடையாது அங்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தும் மற்றும் புறக்காவல் நிலையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீண்டும் இப்புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 இது சம்பந்தமான திருச்சி சரக காவல்துறைத் தலைவர் சந்தோஷ்குமார், துணைத் தலைவர் சரவண சுந்தர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர்   நடவடிக்கை மேற்கொண்டு பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறந்து வைத்து பொது மக்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறை வாயிலாக செய்து கொடுக்க வேண்டும் என  பொன்னமராவதி பகுதி சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News