பொன்னமராவதியில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மின்சார திருத்த சட்ட மசோதா 2021ஐ கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மின்சார திருத்த சட்ட மசோதா 2021ஐ கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் பொன்னமராவதி மின்வாரிய அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில், சிஐடியு, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு மின்சார திருத்த சட்ட மசோதா 2021ஐ திரும்பப் பெற கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.