புதுக்கோட்டை அருகே முடிவடைந்த திட்டப்பணிகள்: அமைச்சர் தொடக்கம்

அரிமளம் ஒன்றியம், துரையூர் ஊராட்சி, கீரணிப்பட்டியில், புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்;

Update: 2023-10-20 17:45 GMT

அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீரணிப்பட்டியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தினையும்,புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீரணிப்பட்டியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தினையும்,புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதி  திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், துரையூர் ஊராட்சி, கீரணிப்பட்டியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தினையும் மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  (20.10.2023) திறந்து வைத்தார்.

பின்னர்  சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொண்டு வருகிறார். அதில், புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் இன்றையதினம், கீரணிப்பட்டியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடம் மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து வைக்கப்பட்டது. அதன்படி கீரணிப்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்திற்கு சென்று வருவதன் மூலம் நிறைவடையும்.

அதனைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, வீடுகளுக்கு தேவையான குடிநீர் நிறைவாக வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீரினை இப்பகுதி பொதுமக்கள் வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். மேலும் இதுபோன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் துரையூர் ஊராட்சியில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.44 லட்சம் மதிப்பீட்டில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் மற்றும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவாக, நல்ல முறையில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனவே முதலமைச்சரால்  கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணராஜா, சிங்காரவேலன், ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News