செயல்முறை வட்டக் கிடங்கு பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் வழங்கும் பணி தொடக்கம்

பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2022-08-09 14:30 GMT

 பொன்னமராவதி செயல்முறை வட்டக் கிடங்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி செயல்முறை வட்டக் கிடங்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், பொன்னமராவதி செயல்முறை வட்டக்கிடங்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி  கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் சட்ட அமைச்சர்  தெரிவித்ததாவது;2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட இந்த நெல்கொள்முதல் கிடங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்றையதினம் உணவுப் பொருள் அனுப்பி வைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக 1,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கும் பணி துவங்க ஆவன செய்யப்படும். துளையானூரில் 5,000 ஏக்கரில் நெல்கொள்முதல் அமைக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக் குத் தேவையான நெல், அரிசி இவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் பணியினையும், விவசாயிகளின் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் எஸ்.உமாமகேஸ்வரி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News