திருமயம் துணை மின்நிலையப் பகுதியில் நவ 18 -ல் மின்தடை

திருமயம் துணை மின்நிலையப்பகுதிக்குள்பட்ட விராச்சிலை, திருமயம், ராயவரம், கோனாபட்டு , ராங்கியம், பெல் ஆகிய பகுதிகளில் மின்தடை;

Update: 2023-11-16 13:30 GMT

திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவுள்ளதால் வரும் சனிக்கிழமை (நவ.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருமயம் மின் வாரிய உதவி செயற் பொறியாளர் (இயக்கலும் காத்தலும்) கா. ராமநாதன் வெளியிட்ட தகவல்:

திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் 18.11.2023 -சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9. மணி முதல் மாலை 4. மணி வரை மின் விநியோகம் இருக்காது .

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

இராயவரம் மின்பாதை: திருமயம், மணவாளங்கரை. இளஞ்சாவூர். இராமச்சந்திரபுரம். கண்ணங்காரைக்குடி, ஊனையூர்.சவேரியார்புரம்.

கோனாப்பட்டு மின்பாதை:குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாப்பட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர்.

இராங்கியம் மின்பாதை:வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப் பட்டி, இராங்கியம், கண்ணனூர்.

விராச்சிலை மின்பாதை:மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி.லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை.

பெல்(B.H.E.L) மின்பாதை 1 & II : பெல் நிறுவனம். ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை(18.11.2023) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்பதால், பொதுமக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News