திருமயம் தொகுதியில் 638 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் வழங்கல்
பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவருவதற்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.;
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 638 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி (12.08.2023) வழங்கினார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவ, மாணவிகள் நாள்தோறும் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவருவதற்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 638 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
அதன்படி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 58 மாணவர்களுக்கும், 23 மாணவிகளுக்கும், திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 94 மாணவிக ளுக்கும், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும், பி.அழகாபுரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 70 மாணவிக ளுக்கும்,
நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கும், 86 மாணவிகளுக்கும், குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கும், 98 மாணவிகளுக்கும், கோனாப்பட்டு சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கும், 33 மாணவிகளுக்கும் என மொத்தம் 638 மாணவ, மாணவிகளுக்கு ரூ.30,66,140 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
மேலும் மிதிவண்டிகளின் பயன் மாணவ, மாணவிகளுக்கு உரிய காலத்திற்குள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை யில் தற்பொழுதே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுப் பள்ளிகள் மாணவர்களின் பெருமையாகும். அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டமும், மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பழம்பெருமை வாய்ந்த இப்பள்ளியின் கட்டடத்தை ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் இந்த மிதிவண்டியினை பயன்படுத்து வதன் மூலம் பள்ளிக்கு உரிய நேரத்திற்குள் சென்றடை வதுடன், தங்களுக்கான உடற்பயிற்சியாகவும் அமையும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு (எ) சிதம்பரம், சரண்யா சரவணன், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் .புவியரசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்.சாலை செந்தில், ஊராட்சிமன்றத் தலைவர் .சிக்கந்தர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;