பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின் லாபம் பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

Update: 2021-05-17 14:30 GMT

பொன்னமராவதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

அதில் முக்கிய அம்சமான சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் தூய்மைப் பணியாளர்களால் தயாரிக்கப்பட்டு அதனை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதில் கிடைக்கும் லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை பிரித்து வழங்கும் நிகழ்ச்சி இன்று பேரூராட்சி எதிரே மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் தனபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் கனகமுத்து தலைமையில்அசோகா மெட்டல் உரிமையாளர் பாஸ்கர், அரசு ஒப்பந்தகாரர் வெங்கடேசன் ஆகியோர்  கலந்து கொண்டு  லாபத் தொகையை தூய்மை காவலர்களுக்குபிரித்து வழங்கினர். .

மேலும் இதில் வர்த்தகர் சங்க தலைவர் பழனியப்பன், அரசு ஒப்பந்தகாரர் வெங்கடேசன், யுனிக் டெக்னாலஜீஸ் நிறுவனர் ராஜ்குமார்  உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News