பொன்னமராவதியில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
பல்வேறு கோரிக்கைகளை இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட கிராம உதவியாளர்கள் சங்கமான தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் வட்ட பொதுக்குழு கூட்டம் காரையூர் அருகே உள்ள அரசமலையில் வட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கோருதல்,
புதிய ஓய்வூதியம் ரத்து செய்து,பழைய ஓய்வூதியத்தை வழங்க கோருதல்,
இயற்கை இடர்பாடுகள் காலங்களில் சிறப்பு படி வழங்குதல்,கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதனை 30 சதவீதமாக வழங்குதல்,
பணிமூப்பு காலங்களில் 10 ஆண்டுகளில் என்பதனை ஆறு ஆண்டுகளாக குறைக்க, ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கிராம உதவியாளர் ஓட்டுநர் பணி வழங்குதல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்பையா,செயலாளர் செல்லையா,வட்டச் செயலாளர் விஜயா பொருளாளர் சின்னத்துரை உள்ளிட்ட அனைத்து கிராம உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.