வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை , திருமயம் ஒன்றியப் பகுதிகளில் திட்டப்பணிகளை, ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்

Update: 2023-07-02 16:15 GMT

திருமயம் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்குகிறார், சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர்,  அமைச்சர் ஆய்வு செய்தனர்

புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தலைமையில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  (02.07.2023) தொடக்கி வைத்தார்.

பின்னர்  சட்ட அமைச்சர் கூறியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர்  பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி கிராமப் புறங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கிராமங்களின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்தவகையில், இன்றைய தினம் புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அரசுடன் இணைந்து ‘நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், பணிகளை மேற்கொண்டு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அதன்படி, புதுக்கோட்டை ஒன்றியம், பெருங்களூரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 450 மீட்டர் நீளமுடைய தேரோடும் வீதி சாலை மேம்பாட்டுப் பணியினையும் மற்றும் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் ஊருணி ரூ.73.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினையும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமயம் ஒன்றியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ரூ.22.65 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இராங்கியம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறந்து வைத்து, 20 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. இராங்கியம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்கள் மற்றும் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு கட்டடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் திருமயம் ஊராட்சி பேருந்து நிலையத்தில், 14வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும், திருமயம் ஊராட்சியில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.50,000 வீதம் 3 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், வட்டார வணிக வள மையம் திட்டத்தின்கீழ் 6 நபர்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ.3 இலட்சம் மதிப்பிலான தொழில் கடனுதவிக ளையும், ஒரு நபருக்கு ரூ.50,000 மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெண்கள் அனைவரும் தனது சொந்த காலில் நின்று வீட்டின் தேவைகளையும், நாட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிக அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  சுழல் நிதி வழங்கி வருகிறார்கள்.

எனவே கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும், தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, மாவட்ட இயக்க மேலாண் அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம்,

நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராமகிருஷ்ணன், திருமயம் ஒன்றியக் குழுத் தலைவர்  அழ.ராமு, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை)  அனிதா, நகர்மன்ற உறுப்பினர்  கனகம்மன் பாபு, ஊராட்சிமன்றத் தலைவர்கள் சாந்தி பொன்னையா (இராங்கியம்), சிக்கந்தர் (திருமயம்), உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

Tags:    

Similar News