பொன்னமராவதி ஒன்றியத்தில் 1183 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் தமிழக அரசின் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியப்பகுதியில் உள்ள தூத்தூர், மேலத்தானியம், பகவாண்டிப்பட்டி, வேகுப்பட்டி, அரசமலை, ஆலவயல், ஏனாதி, ஆர்.பாலக்குறிச்சி, கண்டியாநத்தம், ஒலியமங்கலம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் காரையூர், பொன்னமராவதி, மேலத்தானியம், அம்மன்குறிச்சி, மேலைச்சிவபுரி, கொப்பனாப் பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று 1183 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உத்தரவின்படி, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார் அறிவுறுத்தியபடி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்பேரில், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோயில் வீதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ முகாமில், வேகுப்பட்டி, உள்ளிட்ட பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கும் , காவலர்களுக்கும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், ஊராட்சித் தலைவர் அர்ச்சுணன், துணைத் தலைவர் முத்து முன்னிலையில் அப்பகுதி பொது மக்களுக்கு டாக்டர் ரவிக்குமார் உடல் பரிசோதனை மேற்கொண்டு, செவிலியர் மெர்சி தடுப்பூசியை செலுத்தினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி, மருந்தாளர், வார்டு உறுப்பினர்கள் அப்துல்கை, செல்வி சண்முகம், கணேசன், அழகி, தேன்மொழி குமார், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.