பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டபின் செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

Update: 2021-08-08 08:54 GMT

பொன்னமராவதியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் தடுப்பூசி போடும் பணி தீவிரம் .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உத்தரவின்படி, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார் அறிவுறுத்தலின்படி, பொன்னமராவதி வர்த்தக கழக மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு  தாசில்தார் ஜெயபாரதி தலைமை வகித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டபின்  செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வைரஸ் வடிவிலான சேவ் ஹோம் கோலப்போட்டியும், விழிப்புணர்வு பட்டிமன்றமும் நடைபெற்றது.

இதில் டாக்டர் அருண்குமார், ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் ஜோதி, வர்த்தகர் சங்கத் தலைவர் கே .எஸ். பழனியப்பன் மற்றும் சுகாதார செவிலியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மேலைச்சிவபுரி, ஆலவயல், செவலூர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி  முகாம்கள் நடைபெற்றது.


Tags:    

Similar News