பொன்னமராவதியில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது;

Update: 2022-07-20 14:00 GMT

பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட்டது.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளுக்கான வட்டார மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா,வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் ஆகியோர் தலைமையில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு முன்னிலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டியை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி காளிதாஸ் தொடங்கி வைத்தார்.

மேலும் சதுரங்க போட்டியில் மாணவிகள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.மேலும் இதில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்மணி,கங்கா தேவி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News