தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சுங்கச்சாவடியில் பிச்சை எடுக்கும் போராட்டம்

தமிழகத்திலுள்ள சுங்கச் சாவடி களில் பொதுமக்களி டமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது

Update: 2021-08-31 11:53 GMT

புதுக்கோட்டை அருகே லெணாவிலக்கில் உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய பிச்சையெடுக்கும் நூதன போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், லெணாவிலக்கில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட்டு பிச்சையெடுக்கும் நூதனப்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில்  பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், தமிழகத்தில் சுங்கச்சாவடியை வேண்டாம் அதை அகற்ற கோரி ஒன்றிய அரசை கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் லெணாவிலக்கில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பிச்சைக்கார வேடம் அணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுத்து சுங்கச் சாவடி அலுவலகத்திற்கு செலுத்தும் விதமாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து சுங்கச் சாவடி அலுவலகத்திற்கு செலுத்தும் விதமாக நாங்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம்.  தற்போது பாஸ்டாக் என்ற பெயரில் அவர்களாகவே வாகனங்களுக்கான கட்டணத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர் அப்படி பாஸ்டாக் அல்லாத வாகனத்திற்கு ஒரு சுங்கச்சாவடி கடப்பதற்கு 90 ரூபாய் வசூல் செய்கின்றனர் இது அதிகப்படியான கொள்ளை அடிக்கும் விதமாக உள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை ஒன்றிய அரசு அகற்ற கோரியும், சுங்கச் சாவடிகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்து கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த நூதனப்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

Tags:    

Similar News