பொன்னமராவதி ஒன்றியத்தில் பயன்பாட்டுக்கு வந்த ரூ.75.58 லட்சம் வளர்ச்சிப்பணிகள்
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று, ரூ.75.58 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.75.58 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்றப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.
அதன்படி இன்றையதினம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கோவனூரில் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை, செம்பூதி ஊராட்சி சிவந்திலிங்கபுரம் மற்றும் அண்ணாநகரில் தலா ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம், செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், நல்லூர் ஊராட்சி ஆத்தங்காடில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை, நல்லூரில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலகம், கொப்பனாப்பட்டி ஊராட்சி கொன்னையூரில் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், ஏனாதியில் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை, திருக்களம்பூர் ஊராட்சி கருப்புக்குடிப்பட்டியில் ரூ.9.08 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் என ஆகமொத்தம் ரூ.75.58 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்றப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திறந்து வைத்து பேசியதாவது;
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலில் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் தேவையறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் மலரும் வகையில் மக்களுக்காக அறிவித்த திட்டங்களுடன், அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான, சாலைவசதி, குடிநீர்வசதி, பொது விநியோகத்திட்டம் உள்ளிட்டவைகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கோவனூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடை மூலமாக பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதுடன் அவர்களின் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படுகிறது.
மேலும் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படை காரணமாக விளங்கும் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் காரணமாக அரசு பள்ளிகள் அனைத்தும் மாணவர்களை ஈர்க்கும் காந்தமாக விளங்கி வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு கிராமப்புறங்களில் உள்ள சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தனிக்கவனம் கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.
இந்நிகழ்ச்சிகளில்; தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (பொ) தனலெட்சுமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சி.புவனேஸ்வரி, கூட்டுறவு ஒன்றியங்களின் மேலாண் இயக்குநர் குமார், பொன்னமராவதி ஒன்றியக்குழுத்தலைவர் சுதா அடைக்கலமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து, துணைப் பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) அப்துல்சலீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வை.சதாசிவம், பி.தங்கராஜு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.