புதுக்கோட்டையில் 153 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கல்
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 153 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், முத்தமிழறிஞர்கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 153 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நச்சாந்துப்பட்டி ஸ்ரீ உமையாள் திருமண மண்டபத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு , மாவட்ட ஆட்சித்தலைவர் .மெர்சி ரம்யா தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 153 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி (10.12.2023) வழங்கினார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனில் அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சார்பில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மாவட்டந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், திருமயம் வட்டத்திற்குட்பட்ட 153 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் இன்றைய தினம் நச்சாந்துப்பட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய பொது மக்களின் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் அனைவரும் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடு கட்டும் திட்டங்கள் மூலமாக வீடுகளை கட்டிக்கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு உண்டான அங்கீகாரத்தினை பெற முடியும்.
மேலும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், ஊராட்சிமன்ற தலைவர் சிதம்பரம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்;.