பொன்னமராவதி அருகே அரசமலை மதியாணியில் கிணற்றில் விழுந்த கன்று குட்டியை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அரசமலை மதியாணியில் சுப்பையா மகன் முத்துசாமி என்பவரது 40 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கன்றுக்குட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை கண்ட சரத் என்பவர் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள். கயிறு மூலம் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை மிக லாவகமாக மீட்டு கன்றுக்குட்டியின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.