பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் உலக விலங்கின நோய்கள் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக விலங்கின நோய்கள்தின உறுதிமொழி ஏற்பு

Update: 2021-07-06 10:18 GMT

உலக விலங்கின நோய்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் உறுதிமொழி வாசிக்கும் அதிகாரிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் உலக விலங்கின நோய்கள் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.

விழாவில், மாவட்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குனர் கலைவாணி,   வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் ஆகியோரது ஆணைக்கிணங்க நடைபெற்ற உலக விலங்கின நோய் பற்றிய விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுமதி ராஜூ தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில், புதுக்கோட்டை மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், பகுதி சுகாதார செவிலியர் திலகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச் செல்வன், வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ராஜாரெத்தினம், சுகாதார ஆய்வாளர் கள் உத்தமன், ரவீந்திரன், ராமலிங்கம், வீரமணி, அபிதாஸ் வசந்த் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ராணி சண்மு கப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் உலக விலங்கின நோய்பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழியை வட்டார மருத்துவர் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


Tags:    

Similar News