சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு குண்டர் சட்டம்

18 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Update: 2022-03-20 04:28 GMT

 18 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த காரணத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் தினேஷ்குமார் 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒடுக்கம்பட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்(19) என்ற இளைஞர் கர்ப்பமாகி உள்ளார்.

இதையடுத்து கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று தான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியிலான வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் குற்றவாளி தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பரிந்துரைத்தார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆணையின்படி தினேஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News